வங்கி விடுமுறை:
இன்றைய காலகட்டத்தில் வங்கி கணக்கில் பணம் போடுவது, எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருந்தாலும், ஒரு சில காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள், வங்கி கிளைக்கு செல்ல வேண்டிய சூழல் அவ்வப்போது ஏற்படுகிறது.
எனவே, வங்கி விடுமுறை குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், நாடு முழுவதும் 2024 ஆகஸ்ட் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி,
- ஆகஸ்ட் 4 – ஞாயிற்றுக்கிழமை,
- ஆகஸ்ட் 10 – 2வது சனிக்கிழமை,
- ஆகஸ்ட் 11 – ஞாயிற்றுக்கிழமை,
- ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்,
- ஆகஸ்ட் 18 – ஞாயிற்றுக்கிழமை,
- ஆகஸ்ட் 24 – 4வது சனிக்கிழமை,
- ஆகஸ்ட் 25 – ஞாயிற்றுக்கிழமை,
- ஆகஸ்ட் 26 – கிருஷ்ண ஜெயந்தி ஆகிய 8 தினங்களிலும் வங்கிகள் செயல்படாது என தெரிவித்துள்ளனர்.