ரூ.1,000 உரிமைத் தொகை:
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தகுதியான 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு, கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கலைஞர் மகளிர் திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்த பயனாளிகள், கூடுதலாக இணைக்க உள்ளதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார்.
அதன்படி, இம்மாதம் (ஜூலை) முதல் புதிதாக 1.48 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதேபோல், கலைஞர் மகளிர் திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு புதிதாக இணைக்கப்பட்ட மகளிர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.