2024 ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைக்கான சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆயுதபூஜை சிறப்பு ரயில்:
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தங்கி இருக்கும் பலரும் பண்டிகை, திருவிழா போன்ற விசேஷ தினங்களில், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.
அந்த வகையில், அடுத்த மாதம் (அக்டோபர்) 11ஆம் தேதி (வெள்ளி) ஆயுதபூஜை, 12ஆம் தேதி (சனி) விஜயதசமி போன்ற பண்டிகையால் தொடர் விடுமுறை வழங்கப்பட உள்ளது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று வர பலரும் ரயில், பேருந்து என முன்பதிவுகளை, இப்போதே தொடங்கி விட்டனர்.
அதன் எதிரொலியாக ரயில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலே, விரைவாக டிக்கெட்டுகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் 100க்கும் மேல் வெயிட்டிங்-கில் வந்துவிட்டது.
எனவே, கடந்த ஆண்டை விட நடப்பாண்டு (2024) ஆயுதபூஜைக்கான சிறப்பு ரயில்களை, தெற்கு ரயில்வே நிர்வாகம் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.