2025 பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவுகள், இன்று முதல் தொடங்க இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு:
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வேலை மற்றும் கல்வி நிமித்தமாக பலரும், தங்களது சொந்த ஊர்களை விடுத்து தங்கி வருகின்றனர்.
இவர்கள் பண்டிகை போன்ற தொடர் விடுமுறை தினங்களில் சொந்த ஊருக்கு செல்ல ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர்.
இதற்கேற்ப 120 நாட்களுக்கு முன்னதாகவே, ரயில்வே நிர்வாகம் முன்பதிவு டிக்கெட்களை விநியோகம் செய்து வருகிறது.
அந்த வகையில், இன்று (செ.12) முதல் 2025 பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு டிக்கெட்களை, IRCTC இணையதளத்தில் வெளியிட இருக்கின்றனர்.
அதன்படி முன்பதிவு தொடங்கும் தேதி மற்றும் நேரம், கீழே அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளது.
பயணத் தேதி | கிழமை | முன்பதிவு தொடங்கும் தேதி & நேரம் |
12.01.2025 | ஞாயிறு | 12.09.2024 & 08.00 a.m. |
13.01.2025 | திங்கள் | 13.09.2024 & 08.00 a.m. |
14.01.2025 | செவ்வாய் (பொங்கல்) | 14.09.2024 & 08.00 a.m. |
15.01.2025 | புதன் | 15.09.2024 & 08.00 a.m. |
16.01.2025 | வியாழன் | 16.09.2024 & 08.00 a.m. |
இருந்தாலும் , குறிப்பிட்ட சில வழித்தடங்களில் இயங்கும் ரயில்களுக்கான முன்பதிவு தேதியில் சில மாற்றங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.