தமிழகத்தில் இன்று (ஜூலை 26) முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இடி மின்னலுடன் கூடிய மழை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இதன் காரணமாக முல்லைப்பெரியாறு உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருவதாக தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 26) முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று (ஜூலை 26) ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.