இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, கிரிக்கெட் சரித்திரத்தில் தனது 16 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார்.
விராட் கோலி:
இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த விராட் கோஹ்லி, தற்போது தனது பதினாறு ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்ய உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 18, 2008-ல் ஒருநாள் போட்டிகள் மூலம் இந்திய அணியில் அறிமுகமான இவர், T20, டெஸ்ட் உட்பட மூன்று வடிவ தொடரிலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஐசிசி-யின் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தும் அசத்தியுள்ளார்.
18 என்ற ஜெர்சி எண்ணை தனதாக்கிக் கொண்ட கோஹ்லி, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்திலும் 80 சதங்களை அடித்து, உலக அளவில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.
100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ள இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் சாதனையையும் விராட் கோஹ்லி முறியடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இவர் டி20 போட்டியிலிருந்து மட்டும் ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை,
- 113 டெஸ்ட் போட்டிகளில் 7 இரட்டை சதங்கள், 29 சதங்கள் என 8848 ரன்களும்,
- 295 ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள், 72 அரைசதங்கள் என 13906 ரன்களும்,
- 125 டி20 போட்டிகளில் ஒரு சதம், 38 அரைசதங்களுடன் 4188 ரன்களும் எடுத்து அசத்தியுள்ளார்.