லொசேன் டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.
நீரஜ் சோப்ரா:
சமீபத்தில் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் தங்கமகன் என்றழைக்கப்படும் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்று அசத்தி இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது நடைபெறும் லொசேன் டயமண்ட் லீக்-கில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டார்.
கடந்த 2022, 2023 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டயமண்ட் லீக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்ததால், இம்முறையும் தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நடப்பு லீக் போட்டியில் 89.49 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இருப்பினும், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் லட்சிய இலக்கு 90 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், 90.61 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.