லோக்சபா தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்:
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிகளிலும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க. என மூன்று கட்சி தலைவர்களும் மும்முரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தி.மு.க.-வுடன் (திராவிட முன்னேற்ற கழகம்) காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.சி)., மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கூட்டணி கட்சிகள் இணைந்து களம் காண்கிறது.
அதன் அடிப்படையில் லோக்சபா தேர்தலில் தி.மு.க. சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. வேட்பாளர்கள்:
- தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,
- மத்திய சென்னை- தயாநிதி மாறன்,
- வட சென்னை- கலாநிதி வீராசாமி,
- அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்,
- காஞ்சிபுரம் ( தனி)- செல்வம்,
- பெரம்பலூர்- அருண் நேரு,
- ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,
- வேலூர்- கதிர் ஆனந்த்,
- ஆரணி- தரணிவேந்தன்,
- தஞ்சாவூர்- S.முரசொலி,
- தர்மபுரி- ஆ.மணி,
- திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை,
- சேலம்- டிஎம் செல்வகணபதி,
- கள்ளக்குறிச்சி- மலையரசன்,
- கோயம்புத்தூர்- கணபதி ராஜ்குமார்,
- பொள்ளாச்சி- K.ஈஸ்வரசாமி,
- நீலகிரி (தனி)- ஆ.ராஜா,
- ஈரோடு- கே.இ.பிரகாஷ்,
- தேனி- தங்க தமிழ்செல்வன்,
- தூத்துக்குடி- கனிமொழி கருணாநிதி,
- தென்காசி (தனி)- ராணி ஶ்ரீகுமார்.
காங்கிரஸ் வேட்பாளர்கள்:
- புதுச்சேரி- வைத்தியலிங்கம்.
- திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில்.
- கடலூர்- விஷ்ணு பிரசாந்த்.
- மயிலாடுதுறை- சுதா.
- கிருஷ்ணகிரி- கோபிநாத்.
- கரூர்- ஜோதிமணி.
- விருதுநகர்- மாணிக்கம் தாகூர்.
- சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்.
- திருநெல்வேலி- ராபர்ட் புரூஸ்.
- கன்னியாகுமரி- விஜய் வசந்த்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி:
- விழுப்புரம் (தனி)- ரவிக்குமார்.
- சிதம்பரம் (தனி)- தொல் திருமாவளவன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:
- மதுரை- சு.வெங்கடேசன்,
- திண்டுக்கல்- சச்சிதானந்தன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:
- நாகப்பட்டினம் (தனி)- வை.செல்வராஜ்,
- திருப்பூர்- சுப்பராயன்.
ம.தி.மு.க. வேட்பாளர்கள்:
- திருச்சி- துரை வைகோ.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்:
- இராமநாதபுரம்- நவாஸ் கனி.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி:
- நாமக்கல் – மாதேஸ்வரன் (உதயசூரியன் சின்னம்).