நடப்பாண்டு (2024) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி:
ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று இந்திய மக்களால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த கொண்டாட்டத்தின் எதிரொலியாக கோயில்கள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து பொதுமக்கள் வழிபடுவதுடன், குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு சிலையை அருகாமையில் உள்ள ஆற்றில் கரைப்பார்கள்.
அப்படி விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்காக பக்தர்கள் திரளானோர் செல்லும் போது, ஒரு சில நேரங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும்.
அந்த அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக, ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்திகான வழிபாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டில் (2024) வருகிறது செப்டம்பர் 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு , தற்போது விநாயகர் சதுர்த்திகான வழிபாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதில்,
- விநாயகர் சிலைகளை நிறுவ உரிய அனுமதி பெற்றித்தால் வேண்டும்.
- நிறுவப்படும் சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.
- தீயணைப்புத்துறை மற்றும் மின் வாரியத்திடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.
- விநாயகர் சிலைகளை கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற வழிபாட்டு தலங்கள் அருகில் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.