தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகளிர் உரிமை தொகை:
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசானது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடியே 15 லட்சத்திற்கு மேற்பட்ட மகளிர் மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையை பெற்று வருகின்றனர்.
தற்போது, இந்த திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, புதிதாக திருமணமாகி குடும்ப தலைவியாக உள்ள பெண்கள், ஆவணங்கள் சரியாக இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்டோர்களுக்கு அடுத்த சில மாதங்களில் புதிய விண்ணப்பம் வழங்க இருப்பதாக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், அரசின் ஓய்வூதியம் மற்றும் மற்ற நிதி உதவிகளை பெறுவோர், அரசு ஊழிய பெண்கள் உள்ளிட்டோருக்கு இத்திட்டம் பயன் அளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.