2004-05ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே இன்னிங்சில் 7 கேட்ச்களை பிடித்து தோனி சாதனையை விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் சமன் செய்துள்ளார்.
துருவ் ஜுரேல்:
இந்திய கிரிக்கெட் அணியில் தோனி, விராட் கோஹ்லி உள்ளிட்ட பல முன்னணி வீரர்களும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு வருவதால், திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் ஐபிஎல், டெஸ்ட் என அனைத்து வடிவ போட்டிகளிலும் முக்கியமான நேரங்களில் அதிரடியான ஆட்டத்தை துருவ் ஜுரேல் வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால் ரிஷப் பண்ட்-க்கு மாற்றாக இருப்பார் என ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த சூழலில் துலீப் கோப்பை தொடரில் இந்திய ஏ அணிக்கு எதிரான போட்டியில், 2 இன்னிங்சிலும் துருவ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளார்.
இருந்தாலும் ஒரே இன்னிங்சில் 7 கேட்சுகளை பிடித்து, சிறந்த விக்கெட் கீப்பராக, தன்னை நிரூபித்துள்ளார்.
இதன்மூலம், கடந்த 2004-05 ஆம் ஆண்டில் East Zone-க்கு எதிரான போட்டியில், மகேந்திர சிங் தோனி ஒரே இன்னிங்சில் 7 கேட்ச் பிடித்த சாதனையையும் சமன் செய்துள்ளார்.
இனி அடுத்து வரும் போட்டிகளில், துருவ ஜுரேல் பேட்டிங்கிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.