ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், விராட் கோஹ்லியை பற்றி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
விராட் கோஹ்லி:
இந்திய அணியின் பிரபலமான முன்னணி வீரரும், கிங் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விராட் கோஹ்லி, கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளை கடந்துள்ளர்.
தனது கிரிக்கெட் பயணத்தில் பல சிரமங்களையும், தடைகளையும் தாண்டி சச்சின் போன்ற ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்துள்ளார்.
இதன்மூலம் மகேந்திரசிங் தோனிக்கு பிறகு மூன்று வடிவ போட்டிகளிலும் கேப்டனாக இருந்திருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் பிரபலமான வீரர் ஸ்டீவ் ஸ்மித், ‘விராட் கோஹ்லியின் சிந்தனை மற்றும் செயல்கள் ஆஸ்திரேலியரை போல் உள்ளது.’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், விராட் கோஹ்லியின் போர் குணம், எதையும் எதிர்கொள்ளும் தன்மை போன்ற ஆஸ்திரேலியரின் குணங்கள் போல உள்ளன எனவும் கூறியுள்ளார்.