ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த வீரர்கள் பங்குபெறும் ஆஃப்ரோ ஆசிய கோப்பை போட்டிகளை நடத்த கிரிக்கெட் வாரியங்கள் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஃப்ரோ ஆசிய கோப்பை:
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஆஃப்ரோ ஆசிய கோப்பை போட்டி தான், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்று இருந்தது.
கடந்த 2005ல் தொடங்கிய ஆஃப்ரோ ஆசிய கோப்பையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய ஆசியா கண்டத்தை சேர்ந்த வீரர்கள் ஒரு அணியில் இடம் பெறுவார்கள்.
அதேபோல், மறுபுறம் ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த ஜிம்பாப்வே, கென்யா. தென்னாப்பிரிக்கா, நமீபியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் மறு அணியிலும் இடம் பெறுவார்கள்.
இத்தொடரின் 2 வது மற்றும் கடைசி போட்டி 2007ஆம் ஆண்டு நடைபெற்ற போது மகேந்திர சிங் தோனி, கங்குலி போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இதன்பிறகு நிறுத்தப்பட்டு இருந்த ஆஃப்ரோ ஆசிய கோப்பை போட்டிக்கு, தற்போது புத்துயிர் அளிக்கக்கூடிய வகையில் கிரிக்கெட் வாரியங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது உண்மையாகும் பட்சத்தில் விராட் கோஹ்லி, பாபர் அசாம், பும்ரா, அப்ரிடி போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள், ஒரே அணியில் விளையாடுவதை ரசிகர்கள் கண்டு மகிழலாம்.