RCB அணி:
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடர், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் சிஎஸ்கே (5 முறை), மும்பை இந்தியன்ஸ் (5 முறை), KKR (3 முறை) உள்ளிட்ட அணிகள் கோப்பையை வென்றுள்ளது.
இருந்தாலும் விராத் கோஹ்லி போன்ற முன்னணி வீரர்களை கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி, அரையிறுதி அல்லது பைனலில் தோல்வியை தழுவி கோப்பையை பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இத்தகைய சூழலில், நடப்பு ஐபிஎல்-லில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட தினேஷ் கார்த்திக், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது பற்றி தினேஷ் கார்த்திக் கூறுகையில், “RCB அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. வருகிற 2025 ஆம் ஆண்டில் எப்படியாவது அணிக்கு கோப்பையை வென்று தருவோம்.” என தெரிவித்துள்ளார்.