தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கல்வி உதவித் தொகை இரட்டிப்பு:
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை, திமுக தலைமையிலான அரசு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள்,
- 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் பட்சத்தில் ஆண்டுக்கு ரூ.2,000 எனவும்,
- 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.6,000 எனவும்,
- 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.8,000 எனவும்,
- பட்டப்படிப்பு பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.12,000 எனவும்,
- பட்ட மேற்படிப்பு பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.14,000 எனவும் இருமடங்காக கல்வி உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.