பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் பாபர் அசாம், தனது பதவியை ராஜினாமா செய்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாபர் அசாம்:
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோஹ்லிக்கு அடுத்தபடியாக பேட்டிங்கில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் பார்க்கப்பட்டு வருகிறார்.
இதனால் தான் என்னவோ? T20, டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் என மூன்று வடிவ போட்டிட்களிலும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் செயல்பட்டு வந்தார்.
ஆனால், உலகக்கோப்பை போட்டியை தொடர்ந்து T20 தொடரிலும் பாகிஸ்தான் அணி படுமோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பாபர் அசாம் மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
இந்நிலையில், உள்நாட்டு சாம்பியன்ஸ் போட்டியில் கேப்டனாக இல்லாமல் பேட்ஸ்மேனாக சிறப்பான ஆட்டத்தை பாபர் அசாம் வெளிப்படுத்தி உள்ளார்.
இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளாதாக, தனது எக்ஸ் தளத்தில் பாபர் அசாம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதில் “பேட்டிங்கில் மட்டும் முழு கவனம் செலுத்துவதோடு, குடும்பத்தினருடனும் நேரம் செலவழிக்க விரும்புகிறேன்.” என கூறியுள்ளார்.