T20 மகளிர் உலகக்கோப்பை தொடரின் நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் போட்டியிலே இந்திய அணி மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.
இந்தியா vs நியூசிலாந்து :
நேற்று முன்தினம் (அக்.3) முதல் தொடங்கிய T20 மகளிர் உலகக்கோப்பை தொடரின் போட்டியில், நேற்று (அக்.4) இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மோதினர்.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 19 வது ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்களுக்கு சுருண்டது.
இதனால் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியிலே மோசமான ஆட்டத்தை இந்திய அணி பதிவு செய்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து குரூப் ‘ஏ’ அணியில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடனான போட்டியில் இந்திய அணி கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழலும் நிலவி உள்ளது.