இந்தியா vs பாகிஸ்தான்:
கடந்த அக்.3 ஆம் தேதி முதல் 2024 மகளிர் டி20 உலக கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் குரூப் ‘ஏ’ பிரிவில் உள்ள இந்திய அணி, நியூசிலாந்து அணியுடனான முதல் போட்டியில் தோல்வியை பதிவு செய்தது.
இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி இருந்த நிலையில், நேற்று (அக்.6) பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோதியது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதன்மூலம் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது
பின்னர் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் இருந்து 4 வது இடத்திற்கு முன்னேறியது.