2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் தேர்தல் பார்வையாளர்களை திமுக நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் பணி:
வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அரசியல் கட்சிகள் பலரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, துணை முதல்வர் உதயநிதி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகிய 5 பேர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அண்மையில் நியமித்துள்ளது.
இதைத்தொடர்ந்து 234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்..
இவர்கள் 234 தொகுதிகளிலும் வாக்காளர் சேர்த்தல் மற்றும் நீக்கம், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி அமைத்தல் போன்ற தேர்தல் பணிகளை மேற்பார்வையிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.