தீபாவளி ஸ்பெஷல்:
நடப்பு (2024) ஆண்டில் தீபாவளி பண்டிகை, வருகிற 31 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது.
இதனை தொடர்ந்து நவ.1ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதால், அடுத்தடுத்து சனி, ஞாயிறு என 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட உள்ளது.
இதனால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தங்கி இருக்கும் பலரும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல, இப்போதே தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை to மதுரை உட்பட பல்வேறு வழித்தடங்களில், வழக்கம் போல் தனியார் பேருந்துகளின் பயண டிக்கெட் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, கவலையில் இருந்த பாமர மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் (TNSTC) அறிவித்துள்ளது.
அதாவது, 28 முதல் 30 ஆம் தேதி வரை ஒரு கட்டமாகவும், நவ.1 முதல் 3 ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 30 ஆம் தேதி சென்னை to மதுரை Deluxe பேருந்து கட்டணம் ரூ.383 லிருந்து தொடங்கி உள்ளதோடு, பல இருக்கைகளும் காலியாக உள்ளது.
இதனால், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்று வர சிரமப்பட்டு இருந்த பாமர மக்கள் உள்ளிட்ட பலரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.