வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த காரணமாக தொடர் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டானா புயல்:
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (அக்.23) டானா புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதற்கேற்ப காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகமும், சற்று அதிகரித்து மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனால், தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது.
எனவே, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.23) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த டானா புயல், நாளை மறுநாள் (அக்.25) ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.