செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான உத்தரவு:
சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை, கடந்த ஆண்டு கைது செய்தது. அதைத்தொடர்ந்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருவதால், சுமார் 250 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக வரும் போது, செந்தில் பாலாஜி உடல் சோர்வுற்று காணப்பட்டதால் பலரும் கவலை தெரிவித்தனர். இந்நிலையில் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான உத்தரவு பிறப்பிக்கப்படும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவில் ஜாமீன் கிடைக்குமா? என திமுக கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.