மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து 3 நாட்களுக்கு மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மதுக்கடைகளுக்கு விடுமுறை:
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்.27 ஆம் தேதி மருது சகோதரர்களின் நினைவு தினம் மற்றும் அக்.30 ஆம் தேதி தேவர் குருபூஜை வெகுவிமரிசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நாளில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மருது சகோதரர்கள் மற்றும் முத்துராமலிங்க தேவர் ஐயாவுக்கு மரியாதை செலுத்துவார்கள்.
தீபாவளி ஸ்பெஷல் பஸ்., சென்னை to மதுரை டிக்கெட் ரூ.383 மட்டுமே., மாஸ் காட்டும் TNSTC!!!
எனவே, இந்த நேரத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு அக்.27, 28, 29 ஆகிய 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.