தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை உள்ளிட்ட விவரங்களை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட நிலையில், அது குறித்த கருத்துக்களை நா.த.க. யின் சீமான் தெரிவித்து உள்ளார்.
முதல் மாநில மாநாடு:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நேற்று (அக்.27) நடைபெற்று இருந்த நிலையில், அக்கட்சியின் கொள்கை உள்ளிட்ட விவரங்களை தலைவர் விஜய் விவரித்து இருந்தார்.
இது விஜய்யின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கு முன்னதாக, த.வெ.க. மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சமூக ஊடகங்களில் பல பதிவுகளும் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் அவர்கள், “த.வெ.க. தலைவர் விஜய் பேசிய, “திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள்“, “பெரியாரின் கொள்கைகளை முன்னெடுப்பேன்” போன்ற கருத்துக்கள் எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானவை” என தெரிவித்துள்ளார்.