கந்தூரி திருவிழா:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள சேக்தாவூத் தர்கா கோவிலில் ஆண்டுதோறும் கந்தூரி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பு (2024) ஆண்டில் வருகிற நவ.13 ஆம் தேதி கந்தூரி திருவிழா கொண்டாடப்பட இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இத்திருவிழாவில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் இந்துக்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பிப்பிப்பார்கள்.
இதனை கருத்தில் கொண்டு வருகிற நவ.13 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக 2024 டிச.7ஆம் தேதி அரசு வேலை நாளாக செயல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.