பெண் குழந்தைகளின் SSY சேமிப்பு திட்டம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி “சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY)” திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் ஒரு லட்சம் வரை முதலீடு செய்து வரலாம். 21 ஆண்டு காலம் வரை செலுத்த வேண்டிய தவணையில், ஒரு தவணை செலுத்த தவறும் பட்சத்தில் ரூ.50 அபராதமாக விதிக்கப்படும்.
வட்டி விகிதம்:
- கடந்த ஆண்டு 7.6 சதவீதமாக வழங்கி வந்த நிலையில், தற்போது 8.2 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
விதிமுறை:
- ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் வரை முதலீடு கணக்கு தொடங்கலாம். ஒரு வேளை இரட்டை பெண் குழந்தை இருந்தால், மேலும் ஒரு பெண் குழந்தை பயன்பெறலாம்.
- குழந்தைகளின் பெயரில் தான் கணக்கு தொடங்க வேண்டும்.
- குழந்தை 10 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- 18 வயதை அடையும் போது பிரீமியத்தில் 50 சதவீதம் திரும்ப பெறலாம்.
தேவையான ஆவணங்கள்:
- குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், புகைப்படம்,
- பெற்றோரின் ஆதார், பான் கார்டு, வங்கி கணக்கு எண்,
- வருமானச் சான்றிதழ்,
- இருப்பிடச் சான்றிதழ்,
- மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி,
விண்ணப்பிக்கும் முறை:
- இந்திய அஞ்சல் அலுவலகம், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நேரில் சென்றோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.