சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தரிசனத்திற்க்காக செல்லும் பக்தர்களுக்கான வசதி வசதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.
மண்டல விளக்கு பூஜை:
உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் அனுதினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருவார்கள்.
இதனால், அக்காலங்களில் பக்தர்களின் நலனுக்காக பல்வேறு வசதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை கோவில் தேவசம்போர்டு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், வருகிற நவ.16 ஆம் தேதி முதல் மண்டல கால பூஜைக்காக சன்னிதானம் நடை திறக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, இம்முறை கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் மாசடைவதை தடுக்க இருமுடி கட்டுடன் கற்பூரம், சாம்பிராணி போன்ற பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அண்மையில் மலர்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், பன்னீர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சென்னை, மதுரை, திருச்சி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து சபரிமலைக்கு படுக்கை வசதி, மிதவை பேருந்துகள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகள் வருகிற நவ.15 ஆம் தேதி முதல் அடுத்தாண்டு (2025) ஜன.16 ஆம் தேதி வரை இயக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.