விராட் கோஹ்லிக்கு அடுத்தபடியாக டெஸ்ட் தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக யார் இருப்பார் என கங்குலி செய்தியாளர்களிடம் பதில் அளித்து உள்ளார்.
டெஸ்ட் தொடர்:
அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வருகிற நவ.22 ஆம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சவுரவ் கங்குலியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நியூசிலாந்து தொடரில் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், ஆஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பெரிய ரன்களை அடித்து, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பார் என நம்புகிறேன்.” என பதில் அளித்தார்.
மேலும், விராட் கோலிக்கு அடுத்து யார் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பார் என கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “விராட் கோலிக்கு அடுத்து டெஸ்ட் தொடரின் மிகப்பெரிய ஸ்டார் வீரராக ரிஷப் பண்ட் இருப்பார். டெஸ்ட் கிரிக்கெட் என வந்துவிட்டால் அவர் ஸ்பெஷலான வீரர் தான்” என கங்குலி புகழ்ந்து கூறியுள்ளார்.