திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தீபத் திருவிழா சிறப்பு பேருந்து:
உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை தீபத்திருவிழா, ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பு (2024) ஆண்டில் வருகிற டிச.13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்ட உள்ளது. இத்திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாவட்ட பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலைக்கு 10,109 சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் (TNSTC) அறிவித்துள்ளது.
அதன்படி, டிச. 12, 13, 14, 15 ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1982 சிறப்பு பேருந்துகளும், மீதமுள்ள சிறப்பு பேருந்துகள் மற்ற நகரங்களில் இருந்து இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், டிச. 13, 14, 15 இல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.