திருவண்ணாமலை to சென்னை சிறப்பு ரயில்:
உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கிரிவலம் செல்வதற்கு நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய தினங்களில் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை to சென்னைக்கு, ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று (மே 2) முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு சில நிர்வாக காரணங்களால் நாளை (மே 3) முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் நாளை (மே 3) அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, காலை 09.50க்கு சென்னையை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும்.