ராகுல் காந்தியை பாராட்டிய செல்லூர் ராஜு:
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை முறித்து கொண்ட எடப்பாடி தலைமையிலான அதிமுக, தனித்து போட்டியிட்டது. இதைத்தொடர்ந்து ‘இந்தியா’ கூட்டணியையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உணவகத்திற்கு சாப்பிட சென்ற சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அதில் கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கு, எளிமையாக பதிலளித்து இருந்ததை பார்த்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல் காந்தி” என பாராட்டி வலைத்தளத்தில் ட்வீட் செய்து இருந்தார்.
அதற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாக்கூர், ‘அண்ணனுக்கு நன்றி‘ என பதில் அளித்து இருப்பார். இது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி உட்பட பலர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக செல்லூர் ராஜு கூறுகையில், “முன்னாள் பிரதமரின் மகன் என்ற அலட்டல் இல்லாமல் எளிமையாக, சாதாரணமாக உணவகத்தில் அமர்ந்து, அனைவருடனும் பேசிக் கொண்டு உணவருந்தி இருந்தார். இது பாராட்டப்பட வேண்டியது என்பதால் தான் பாராட்டினேன். இது தவிர வேறு காரணம் ஏதும் இல்லை.” என விளக்கமளித்துள்ளார்.