தொடர் விடுமுறை கிடைக்குமா?
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என தேர்தல் ஆணையம் மட்டுமல்லாமல் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் ஒரு பகுதியாக ஏப்ரல் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை உட்பட வெளி நகரங்களில் தங்கி இருப்பவர்கள், சொந்த ஊருக்கு சென்று வர எதுவாக சிறப்பு பேருந்துகளையும் TNSTC இயக்க உள்ளது.
ஆனாலும் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை வருவதால், வெளியிடங்களில் வேலை செய்பவர்கள் வியாழன் இரவு கிளம்பி, வாக்களித்த மறுகணமே சனிக்கிழமை வேலைக்கு செல்ல தயாராக வேண்டும் என குழப்பத்தில் உள்ளனர். இதனால் வெள்ளி மட்டுமல்லாமல் சனிக்கிழமையும் சேர்த்து வரை விடுமுறை வழங்க மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.