கோடை விடுமுறையை சிறப்பித்து வரும் மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை நீடிக்கப்படுமா? என பலரும் எதிர்பார்த்து வருவதால், கல்வித்துறை தெளிவுபடுத்தி உள்ளது.
கோடை விடுமுறை:
அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டதால் மாணவர்கள் பலரும் மகிழ்ச்சியில் கொண்டாடி வந்தனர். இத்தகைய சூழலில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் கொளுத்தி வந்த கோடை வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஜூன் 10ஆம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இதைத்தொடர்ந்து வானிலை மாற்றமடைந்து பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் கூடுதலாக கோடை விடுமுறை நீடிக்கப்படுமா? என எதிர்பார்த்தனர்.
ஆனால், ஏற்கனவே அறிவித்தது போல ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை உறுதி செய்தது. இதனால் மீண்டும் பள்ளிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.