TNPSC குரூப் 4 போட்டித் தேர்வை தொடர்ந்து குரூப் 2 போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
TNPSC குரூப் 2:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) போட்டித் தேர்வு அறிவிப்பை, எதிர்நோக்கி பல்வேறு தேர்வர்களும் காத்திருக்கின்றனர்.
அதற்கேற்றார்போல் குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பையும் TNPSC தேர்வாணையம், சமீபத்தில் வெளியிட்டது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் “குரூப் 4” எழுத்துத் தேர்வு, நேற்று (ஜூன் 9) எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது,
வருகிற 28 ஆம் தேதி “குரூப் 2” தேர்வுக்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இம்முறை குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இருப்பதாகவும் அண்மையில் அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் மத்தியில் தேர்வு அறிவிப்பு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.