அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை பெறுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
காப்பீடு திட்டம்:
மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கு, காப்பீடு திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.
அதாவது,
முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை, அறுவை சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சலுகை அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு வழங்கப்படாததால், உயர்தர சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களும், காப்பீடு திட்ட சலுகையை பெறலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.5 லட்சம் வரையிலும் அறுவை சிகிச்சை மற்றும் ரூ.10 லட்சம் வரையிலும் சிறப்பு சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் உட்பட பலர் மத்தியில் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.