“கலைஞர் கனவு” திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு, வீடு கட்டித்தர 3.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
குடிசை இல்லாத தமிழ்நாடு:
2030ஆம் ஆண்டுக்குள் ‘குடிசை இல்லாத தமிழ்நாடு‘ என்ற இலக்கை நோக்கி பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், “கலைஞர் கனவு” திட்டத்தின் மூலம் 2024-25ஆம் ஆண்டில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு, வீடு கட்டித்தர இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்களுக்கு, வீடு கட்டுவதற்கு தலா 3.5 லட்சம் நிதி வழங்கப்படுவதோடு, கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.1 லட்சம் வரை கடனுதவியும் கூடுதல் நிதியாக பெற்றுக் கொள்ளலாம்.
வரும் 25 ஆம் தேதிக்குள் பயனாளர்களை தேர்வு செய்யும் பணிகளை முடித்து, அடுத்த மாதம் (ஜூலை) முதல் “கலைஞர் கனவு திட்டம்” தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்:
- சொந்தமாக பட்டா வைத்திருப்பதுடன் குடிசை வீடுகளில் வாழ்பவர்களாக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.
- புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டு இருப்பவர்கள் பயன் பெற தகுதியற்றவர்கள்.
- குடிசையின் ஏதேனும் பகுதி கான்கிரீட் ஓடு அல்லது ஆஸ்பெட்டாஸ் சீட் இருந்தால் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.