அதிமுக பிரதமர் வேட்பாளர் குறித்த இபிஎஸ் விளக்கம்:
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் பாஜக-வுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டுவிட்டதாக கூறிய அதிமுக மீது பல்வேறு விமர்சனங்களை அரசியல் கட்சி தலைவர்களும் வைத்து வருகிறார்கள். குறிப்பாக மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றால், உங்களின் பிரதமர் வேட்பாளர் யார்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கூறுகையில், “எங்களுக்கு ஆட்சியோ அதிகாரமோ தேவையில்லை. நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சனைக்கான குரலாய் ஒலிப்போம்.” என பதிலளித்துள்ளார்.