மதுரை வேலம்மாள் கல்லூரியில் தயாராகி வரும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 3 ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம்:
தமிழ்நாட்டில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு, அடுத்தபடியாக மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம் தயாராகி வருகிறது.
இதன் கட்டுமான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, நடப்பாண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல் தெரிவித்து வருகின்றனர்.
தங்கம், வெள்ளி விலை., சென்னையில் இன்றைய (ஜூன் 20) நிலவரம் இதுதான்?
இத்தகைய சூழலில், தற்போது கட்டப்பட்டு வரும் மதுரை வேலம்மாள் ஸ்டேடியத்தில், 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மூன்று போட்டிகள் நடப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, அக்கல்லூரி சேர்மேன் தெரிவித்துள்ளார்.
இது தவிர ரஞ்சி, TNPL உட்பட போட்டிகளும் இம்மைதானத்தில் நடைபெற இருப்பதால், மதுரை உட்பட சுற்றுவட்டார மக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.