2024 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட மக்களவை தேர்தல் வாக்குறுதி குறித்த விரிவாக காண்போம்.
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின் முக்கிய வாக்குறுதி:
- நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
- NEET, CUET போன்ற தேர்வுகள் நடத்துவது மற்றும் தேசிய கல்வி கொள்கை குறித்து, மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.
- தூய்மை பணியாளர்கள் பணி நேரத்தில் உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களது குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
- இந்திய ராணுவத்திற்கான அக்னிபாத் திட்டம் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
- 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.400 ஆக ஊதியம் உயர்த்தப்படும்.
- விவசாயிகளின் விளைபொருட்களை விற்பதற்கான சந்தைகள் அமைக்கப்படும்.
- 21 வயதுக்கு கீழ் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களுக்கு, மாதந்தோறும் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும்.
- மாணவர்களுக்கான கல்வி கடன்கள் ஒரு முறை மட்டும் ரத்து செய்யப்படும்.
- மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
- 12ஆம் வகுப்பு வரையிலும் இலவசமாக கட்டாயக் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ST, ST, OBC மாணவர்களுக்கு வழங்கப்படும் வரும் கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படாது.
- தேர்தல் பத்திரம், பணமதிப்பிழப்பு, பெகாசஸ் உளவு, ரபேல் ஒப்பந்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
- ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
- அனைத்து ஜாதியினருக்கும் இடஒதுக்கீடு விரிவாக்கம் செய்யப்படும்.
- பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதலை தடுக்க ரோகித் வெமுலா சட்டம் அமல்படுத்தப்படும்.
- ‘ஒரே வேலை ஒரே ஊதியம்’ எனும் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான ஊதியப் பாகுபாடு தவிர்க்கப்படும்.
- ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி மட்டுமே வழங்கப்படும். மற்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுவது தடுக்கப்படும்.
- மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களுக்கு டீசல் மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
- மீனவ மக்களுக்கான தனி வங்கி, தனி துறைமுகங்கள் கொண்டு வரப்படும்.
- மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்வது, உயிரிழப்பு போன்றவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாலத்தீவு உடனான உறவு மற்றும் சீனா ஆக்கிரமித்துள்ள எல்லை பகுதிகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- அரசுத் தேர்வுகள் மற்றும் அரசு பதவிகளின் விண்ணப்பத்திற்கான கட்டணம் ரத்து செய்யப்படும்.
- ஜம்மு-காஷ்மீர், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
- பாஜகவில் கட்சி மாறி குற்ற வழக்கில் இருந்து தப்பியவர்கள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
- கட்சி மாறும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் பதவிகள் பறிக்கும் படியான சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்.
- பாஜக-வின் செஸ் வரி வசூல் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
- மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்தப்படும்.
- பொது மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட மாட்டோம். நியாயமற்ற முறையில் உள்ள அனைத்து சட்ட விதிகளும் ரத்து செய்யப்படும்.
- பாஜக கொண்டு வந்த ஜிஎஸ்டி முறை மாற்றப்பட்டு புதிய ஜிஎஸ்டி 2.0 கொண்டு வரப்படும்.
- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- நாடு முழுவதும் தினசரி குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 ஆக நிர்ணயம் செய்யப்படும்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி, வேளாண் கல்லூரி, கால்நடை கல்லூரி அமைக்கப்படும்.
- அரசுத் துறைகளில் தற்காலிக முறையில் பணி அமர்த்தும் முறை நீக்கப்படும்.
- மதத்திற்கு எதிரான மோதல்கள், பேச்சு உள்ளிட்ட குற்ற செயல்கள் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.