ரஜினி-லோகேஷ்:
நடிகர் ரஜினிகாந்த்-ன் ‘ஜெயிலர்‘ பட வெற்றியை தொடர்ந்து, அடுத்த பட அப்டேட் குறித்து ரசிகர்கள் தீவிரமாக காத்திருக்கின்றனர்.
அதற்கேற்ப இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-உடன் “கூலி” படத்தில் ரஜினி இணைய இருப்பதாக வெளியான அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படப்பிடிப்பு எப்போது? துவங்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், இன்று (ஜூலை 5) முதல் ஐதராபாத்தில் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், இசையமைப்பாளராக அனிருத் இருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 35 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறும் என தகவல் தெரிவித்துள்ளனர்.