TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு ஹேப்பி., கூடுதலாக 2,208 இடங்கள்? மாஸ் அறிவிப்பு!!

நடந்து முடிந்த 2024 குரூப் 4 எழுத்துத் தேர்வு பணியிடங்களில் கூடுதலாக 2,208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.

TNPSC குரூப் 4:

     TNPSC தேர்வாணையமானது, 6,244 பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத்தேர்வை, கடந்த ஜூன் 9ஆம் தேதி நடத்தி இருந்தது.

குறைந்த பணியிடங்களுக்கான இத்தேர்வில், லட்சக்கணக்கான தேர்வர்கள் கலந்து கொண்டு இருந்த நிலையில், தேர்வுக்கான முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இத்தகைய சூழலில், வருகிற (2025) ஜனவரி மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என தேர்வாணையம் தகவல் தெரிவித்து இருந்தது.

மேலும், கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி குரூப் 4 பணியிடங்களில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 2,208 பணியிடங்களும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, குரூப் 4 தேர்வு எழுதியிருந்த தேர்வர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to our newsletter and stay updated.!

We don’t spam! Read our privacy policy for more info.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top