2024 ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்:
நாடு முழுவதும் வருகிற அக்.11 மற்றும் 12 ஆம் தேதி அன்று ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
இதனால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தங்கி இருப்பவர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இவர்கள் பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை to தூத்துக்குடி மற்றும் சென்னை to நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி,
- அக்.8ம் தேதி இரவு 11.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் to தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் (வ.எண்: 06186) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் மதியம் 01.50 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
- மறுமார்க்கமாக அக்.9ம் தேதி மாலை 04.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 08.55 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.
அதேபோல்,
- அக்.9ம் தேதி இரவு 07.00 மணிக்கு சென்னை சென்ட்ரலில் to நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் (வ.எண்: 06178) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
- மறுமார்க்கமாக அக்.10 ஆம் தேதி இரவு 07.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் (எண் 06179) புறப்பட்டு, மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.