இறைச்சி விற்பனைக்கு தடை:
சமண மதத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மஹாவீர் ஜெயந்தி, நாளை (ஏப்ரல் 21) கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னை சூளை பகுதியில் உள்ள ஜெயின் கோவில் அருகே நடத்தப்படும் இறைச்சி கூடங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஜெயின் கோவிலை சுற்றியுள்ள 100 மீட்டர் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து கடைகளிலும், நாளை (ஏப்ரல் 21-ஞாயிற்றுக்கிழமை) இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதேபோல் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கடைகளும், நாளை மூடியிருக்கும் என தெரிவித்துள்ளார்.