பூத் சிலிப் மற்றும் ஆவணங்களை மொபைலில் காண்பிக்கலாமா?
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும், நாளை (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பூத் சிலிப் மற்றும் அடையாள ஆவணங்களை மொபைலில் காண்பிக்கலாமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக வாக்காளர் உதவி மையத்தை (1950) தொடர்பு கொண்ட போது, ‘மொபைல் போன் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. ஆதலால் அடையாள அட்டை ஒரிஜினல் மற்றும் பூத் சிலிப்-ஐ கையில் கொண்டு செல்ல வேண்டும்.’ என தெளிவுபடுத்தி உள்ளார். மேலும் பூத் சிலிப் பெறாதவர்களுக்கு, வாக்குச்சாவடி மையங்களிலே அலுவலர்கள் விநியோகிப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
அதேபோல் பூத் சிலிப் மட்டும் கொண்டு சென்றால் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படும். பூத் சிலிப் உடன் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு ஆவணங்களின் ஒரிஜினலை எடுத்துச் செல்வது கட்டாயம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- வாக்காளர் அட்டை,
- ஆதார் கார்டு,
- பான் கார்டு,
- டிரைவிங் லைசென்ஸ்,
- பேங்க் பாஸ்புக்,
- மத்திய, மாநில அரசு மற்றும் பொது நிறுவனங்களின் பணியாளர் ஐடி,
- இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு,
- ஓய்வூதிய ஆவணம்,
- ஊனமுற்றோருக்கான தனித்துவமான அட்டை,
- 100 நாள் வேலை திட்ட அட்டை,
- மத்திய அரசு தொழிலாளர் நல மருத்துவ காப்பீடு அட்டை.
- மத்திய அரசின் சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை
- மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை,