ரயில் சேவையில் மாற்றம்?
இந்தியாவில் நீண்ட தூர பயணங்களுக்கு, ரயில் பயணங்களையே பலரும் விரும்புகின்றனர். ஆனாலும் பராமரிப்பு பணி போன்ற காரணங்களால் ஒரு சில வழித்தடங்களில் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது.
அந்த வகையில், ஹைதராபாத் கச்சேகுடாவிலிருந்து இரவு 08.30 மணிக்கு மதுரை புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வ.எண். 07191) மற்றும் குஜராத் ஓகாவிலிருந்து காலை 08.40 மணிக்கு ராமேஸ்வரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் (வ.எண்.16734) மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது, வருகிற மே 27ஆம் தேதி மதுரை சிறப்பு கட்டண ரயில் (வ.எண். 07191) தோன், கூடி, அனந்தபூர், தர்மாவரம், கதிரி, மதனப்பள்ளி, பகலா, சித்தூர், காட்பாடி ஆகிய நிலையங்கள் வழி இல்லாமல் தோன், கூடி, ரேணிகுண்டா, மேல்பாக்கம் மற்றும் காட்பாடி வழியாக இயக்கப்பட உள்ளது.
அதேபோல், ராமேஸ்வரம் ஓகா RMM எக்ஸ்பிரஸ், வரும் 28ஆம் தேதி மட்டும் திருப்பதி செல்லாமல் ரேணிகுண்டா, மேல்பாக்கம் மற்றும் காட்பாடி வழியாக இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.