சென்னையில் இருந்து தென் தமிழக மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரயில் சேவையில் மாற்றம்:
கடந்த சில தினங்களாக சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது சென்னை எழும்பூர் to மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் (வ.எண்.12635) மற்றும் எக்மோர் to திருச்சி செல்லும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்.12653) ஆகிய இரு ரயில்களின் இயக்கங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதாவது,
- ஆகஸ்ட் 1 முதல் 14 ஆம் தேதி வரையிலும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12635), சென்னை எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து மதியம் 02.48 மணிக்கு இயக்கப்படும்.
- ஆகஸ்ட் 2 முதல் 15ஆம் தேதி வரையிலும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12653), சென்னை எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து இரவு 12.40 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.