11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு, மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு:
அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்நிலை கல்வியை ஊக்குவிக்கும் வகையில், 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு “முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு”, கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு மூலம் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என 1000 பேர் வரை தேர்வு செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம், ஒரு கல்வியாண்டுக்கு ரூ.10,000 என இளநிலை பட்டப்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும். நடப்பாண்டில் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு, வருகிற ஜூலை 21 ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி,
- 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்த தேர்வு எழுத ஜூன் 11 முதல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- விருப்பமுள்ளவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் ரூ.50-உம் சேர்த்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், ஜூன் 26 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.