தமிழ்நாட்டில் கூடிய விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என எச்சரித்து வந்த நிலையில் முக்கிய அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை:
ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் 3வது வாரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையால், அதிகமான மழை பொழிவை தமிழ்நாடு சந்தித்து வருகிறது.
அந்த வகையில், நடப்பு (2024) ஆண்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத முதல் வாரத்தில், அதாவது வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வரலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்., நாளை (அக்.8) முதல்?
அதற்கேற்றாற்போல், நாளை (அக்.9) அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகி உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.