இந்திய ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, நடப்பாண்டிற்கான (2024) தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தீபாவளி போனஸ்:
மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தீபாவளி பண்டிகையையொட்டி போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், நடப்பு (2024) ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை, வருகிற அக்.31 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
இதனால் அரசுத் துறைகளில் பணிபுரிபவர்கள் பலரும், தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கணவரின் கப்பு தாங்காத மனைவி? 40 நாளில் Divorce? நீதிபதி அதிரடி உத்தரவு!!
இந்த நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு, கடந்தாண்டை போல நடப்பாண்டிலும் 78 நாள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.