நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.20,000 வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம், கடந்த நவம்பரில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாய்கடிக்கான இழப்பீடு:
இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் நாய் கடி காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்படி பாதிக்கப்பட்டவர்கள், உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவது மட்டுமல்லாமல் இழப்பீடு பெறுவதற்கும் விண்ணப்பிக்கலாம் என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
இருந்தாலும் இந்த உத்தரவு போதிய விழிப்புணர்வு இல்லாமல் பலருக்கும் தெரிவதில்லை. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை முழுமையாக பார்க்கலாம்.
அதாவது,
- ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்படும் பட்சத்தில், அந்த கடியின் அளவை பொருத்து இழப்பீடு வழங்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.
- அதன் அடிப்படையில் ஒரு பல் குறி பாதிப்பு இருந்தால், குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.10,000 வழங்க வேண்டும்.
- தோலில் இருந்து சதையை அகற்றும் அளவுக்கு (குறைந்தபட்சம் 0.2 செ.மீ.) காயம் இருந்தால், குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.20,000 மாநில அரசு வழங்க வேண்டும்.
- மேலும் நாய் கடி பாதிப்பு மற்றும் இழப்பீட்டை தீர்மானிப்பதற்காக மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில் குழுவினை அமைக்க வேண்டும் என பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.